விநாயகர் விரதம் ஆரம்பம்
இந்துக்கள் கொண்டாடும் விழாவாக இவ்விரதம் காணப்படுகிறது . இவ் விரதம் 21நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ் விழாவில் விநாயகர் கதை படிப்பு நடைபெறுகிறது.இது பற்றி மேலும் தகவல்கள் அடுத்த வெளீயீட்டில் தொடரும்
தகவல்-ஜசிந்தன்
வியாழன், 25 நவம்பர், 2010
திங்கள், 22 நவம்பர், 2010
ஞாயிறு, 21 நவம்பர், 2010
karthi kai thunal
யாழ்ப்பாண மண்ணில் கவினுறும் எழில் கொஞ்சும் கார்த்திகைத் தீபத்திருநாள் காரிருள் சூழ்ந்த, கடும் மழை பொழியும் கார்த்திகை மாதத்தில் இருளகல… ஒளி பரவ, சிறந்த பௌர்ணமி நாளில் தீபம் ஏற்றி இறைவனை வழிபாடாற்றுவது கார்த்திகைத் தீபத்திருநாளாகும். திருவண்ணாமலைத் தீபம் உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாமணித் திருமாமணித் திகழ மண்ணான்தன மருவித் திரள் மழலை முழவதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணமறுமே என்று திருஞானசம்பந்தப்பெருமான் உருகிப் பாடும் திருவண்ணாமலைப் பெருந்தலத்தில் இதனை ஒட்டி மஹோற்சவமும் மலைத்தீபம் ஏற்றும் அற்புதக் காட்சியும் இடம்பெறுவது வழக்கம். இதற்காக யாழ்ப்பாணத்துச் சைவப்பெருமக்களில் சிலரும் அண்ணாமலைக்குச் செல்வது வழக்கம். குமராலயதீபம் இது போலவே யாழ்ப்பாணத்து அனைத்து இந்து ஆலயங்களிலும் மிகச்சிறப்பாக இவ்விழா அனுசரிக்கப்பெறவுள்ளது. கார்த்திகை மாதக் கார்த்திகைத் தினத்தில் முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக் கண் தீயிற் பிறந்து வாயுவிலும் நீரிலும் மண்ணிலும் ஆகாயத்திலும் தவழ்ந்து ஆறு குழந்தைகளாகி கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பெற்று நிறைவாக அன்னை உமையாளின் அரவணைப்பில் ஓருருவாகி கார்த்திகேயனான நாள் என்று நம்பப் படுகின்றது. இதனை ஒட்டி இத்தினம் ‘குமராலய தீபம்’ என்று மிகச்சிறப்பாக முருகன் ஆலயங்கள் தோறும் கொண்டாடப்பெறுகின்றது. வள்ளியம்மையை விரும்பும் காதலனாக முருகனைக் காணும் யாழ்ப்பாணத்து அன்பர்கள் மாவிளக்கேற்றி இந்நாளில் வழிபாடாற்றி மகிழ்வர். முருகனின் அவதாரநாளாகவும் அவன் ஆறுருவினின்று ஓருருவாகிய நாளாகவும் போற்றப்பெறும் இத்தினத்தில் முருகன் கோயில்களை நோக்கிப் படையெடுத்து வந்து ஷண்முகார்ச்சனை, முதலியவற்றையாற்றி வழிபாடாற்றுவர். கோயில் வாசல்களில் சொர்க்கப்பனை ஏற்றி அந்த ஒளியின் உயர்ச்சியில் முருகனைக் காண்பர். ஸர்வாலய தீபம் இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமசிவாயவே என்று திருநாவுக்கரசு நாயனார் போற்றும் தீப எழிலின் காட்சியில் யாழ்ப்பாணத்துச் சைவர்களின் வீடுகள் தோறும், வீட்டு முற்றங்கள் தோறும், வீட்டின் முன் பின் வளவுகள் தோறும் பட்டி தொட்டி எங்கும்…தீபங்கள்… தீப்பந்தங்கள் ஏற்றி ஜெகத்ஜோதியாக மிளிர கொண்டாடும் அரிய திருநாள் இத்தீப நன்நாள்… காரிருளுடன் வானின்று மழை பொழியும் அற்புத வேளையில் இருளினூடே ஒளிந்து நின்று பார்க்கும் பூரணசந்திரனின் பிம்பத்தின் எழிலில் இந்நாள் கொண்டாடப்பெறும். இதே நாளில் எல்லா (ஸர்வ) ஆலயங்களிலும் சொர்க்கப்பனை ஏற்றி வழிபடுவர். சொர்க்கப்பனை சொர்க்கத்தை நோக்கி நம்மை வழிப்படுத்தும் தீபப்பனை….சொக்கநாதனாகிய சிவபெருமான் அடி முடியறியா ஜோதியாக அகங்காரத்தை மமகாரத்தை அழித்து பரப்பிரம்ம தத்துவத்தை நிலை நிறுத்தும் காட்சியாக தீப பேரெழிலாகக் காட்சி தரும் விழாவையே சொர்க்கப்பனையாக உருவகித்து ஸம்ப்ரதாயப்படி அதனை அக்கினியில் கொழுந்து விட்டு எரியச் செய்து அதில் கடவுளைக் காட்டுவர். விஷ்ணுவாலய தீபம் விஷ்ணுவாலய தீப விழா ஸர்வாலய தீபங்களுக்கு மறுநாள் அனேகமாகக் கொண்டாடப்பெறுவது யாழ்ப்பாணத்து மரபு. கார்த்திகை நக்ஷத்திரத்தன்று குமராலய தீபம் கொண்ணடாடப்பெறுவது போல கிருஷ்ணபகவான் பிறந்த நக்ஷத்திரமாகிய ரோகிணியன்று விஷ்ணுவாலய தீபம் கொண்டாடப்பெறுகின்றது. ரோகிணி நக்ஷத்திரத்துடன் கூடிய முழுநிலா நாளில் சொர்க்கபனை ஏற்றி யாழ்ப்பாணத்து விஷ்ணுவாலயங்களில் கோவிந்த கோஷத்துடன் இவ்விழாக் கொண்ணடாடப்பெறும். சிறுவர்களின் ஸந்தோஷம் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கோயில்களில் சொர்க்கப்பனை ஏற்றும் சந்தர்ப்பத்தில் தாமும் வைக்கோலால் பொம்மை உருவம் ஒன்று செய்து அதனை சைக்கிளில் வைத்து ‘சொக்கப்பையன் வாறான்..வாறான்…வாறான்…சொக்கப்பையன்..என்று சத்தமிட்டுக் கொண்டு வந்து நடுச்சந்தியில் வைத்து எரியூட்டுகிற வழக்கமும் உண்டு. சொர்க்கப்பனையின் தத்துவம் தெரியாமல் அதனை விளையாட்டாகக் கருதி செய்யும் இப்போக்கை சைவ்சான்றோர் தடுப்பதும் அவசியம். எனினும் சிறுவர்களின் ஸந்தோஷத்திற்காக சில விஷயங்களை விட்டுக் கொடுப்பதில் குற்றமில்லை… தடுக்க வேண்டிய விஷயம் கலாச்சார பண்பாட்டு விழாவான கார்த்திகைத் தீபத்திருவிழாவில் பங்கேற்க ஏராளமான அடியவர்கள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். இதே போலவே வீட்டு வாயில்களிலும் வாழைக் குற்றி வைத்து தீபம் ஏற்றுவதும் வழக்கம். சிலர் இக்குற்றிகளை வெட்டி விழுத்தும் விஷமத்தனமான காரியங்களில் ஈடுபடுவதும். இதைப் போலவே சிவஸ்வரூபமாகக் கண்டு வழிபடுதற்குரியதாக காய்ந்த வாழை சருகு, பன்னந்தடி போன்றவற்றால் இயற்கையம்சங்களினூடு உருவாக்கி சிவாச்சார்யார்கள் மூலாலயத்தில் சிவாக்னியைப் பிரதிஷ்டித்து அதனை மங்கல வாத்திய கோஷத்துடன் கொண்டு வந்து ஏற்றி வைப்பது வழக்கம். ஆனால் சில விவரமறியாதவர்கள் இதில் ரயர் மற்றும் பிளாத்திக் பொருட்களைக் கட்டி எரியச் செய்வது சமய விரோதம்… சாஸ்திர விரோதம்… மற்றும் சூழல் மாசடைவுமாம். இது பற்றி மிகக் கண்டிப்புடன் சான்றோர்கள் செயற்படுவது அவசியம். தொடர்ந்து பேணப்பட வேண்டிய விளக்கீடு விளக்கினை ஏற்றி இருள் தனை அகற்றி…பண்பாட்டியல்…பாரம்பரியம்…சமய உண்மைகளை தொடர்ந்து தக்க வைக்க கார்த்திகை விளக்கீடடைக் கருவியாகப் பயன்படுத்துவது அவசியம். ஒளி தனை ஏற்றி இருள் விலக்கிடுவோம். By:-PPJ |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)