திங்கள், 29 நவம்பர், 2010

விநாயகர்விரதம் 02

நீர்வேலியில் சிறப்புற நிகழும் விநாயகஷஷ்டி விரதம்
நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலயம், நீர்வேலி வாய்க்காற்தரவை மூத்த
விநாயகர் ஆலயம் அகியவற்றில் கடந்த 22.11.2010 திங்கட்கிழமை தொட்டு
விநாயகஷஷ்டி விரதம் என்ற பெருங்கதைப்படிப்பு நோன்பு சிறப்பாக நடைபெற்று
வருகின்றது.

அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில்…
நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் இந்நாட்களில் தினமும்
காலையில் விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வரதபண்டிதர் எழுதிய
பிள்ளையார்கதை படிக்கப்பட்டு வருகின்றது.


மாலையில் விசேட ஆராதனையுடன் இலட்சார்ச்சனை வைபவமும் நடைபெறுகின்றது

வாய்க்காற்தரவைப் பிள்ளையார் ஆலயத்தில்…
நீர்வேலி வாய்க்காற்தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் தினமும் காலையில் விசேட
அபிஷேக ஆராதனைகளும் இலட்சார்ச்சனையும் நடைபெற்று பிள்ளையார் வீதியுலா
வரும் காட்சியும் இடம்பெற்று வருகின்றது.

கோப்பாய் இலுப்பையடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில்…
கோப்பாய்- நீர்வேலி இலுப்பையடி வீரகத்தி விநாயகர் ஆலயத்திலும் அபிஷேக
ஆராதனைகள், இலட்சார்ச்சனை என்பனவற்றுடன் இவ்விரதம் அனுஷரிக்கப்பெற்று
வருகின்றது.

இருபத்தியொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இவ்விரதத்தில் 10.12.2010
வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தின் அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் கஜமுகாசூர
சம்ஹாரமும் 11.12.2010 சனிக்கிழமை விநாயகஷஷ்டி விரத பெருநாளும்
அனுசரிக்கப்பெறவுள்ளது.