தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்
~இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்~
அறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்
அன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை
பணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி
ஆடம்பரமாண வாழ்க்கை போலியான புண்ணகை
படிப்பில் நூறு புள்ளி எடுக்கும் படிக்கும் இளைஞர்கள்
சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்
நவீன மாறங்களால் உலக சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்
தனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்
ஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனம்
ஆசிய நாடுகளில் என்றைக்கும் மாற மதவெறி, இனவெறி
மனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்
மலர்ந்திட்ட தமிழ் புதுவருடம் எங்கள் ஒவ்வொருவரிலும்
மற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்
நீங்கள் ஒவொருவரும் நினைக்கும் நல் விடயங்கள்
உங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தர
எனது வாசகர்கள் நண்பர்கள்,அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது இனிய மன்மத வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்களது சகலவிதமான டிஸன்களையும் குறைந்த விலையில் செய்வதற்கு நாடவேண்டிய ஓரே இடம் -PPJART CS UNIT
தொடர்புகளுக்கு-0750421251
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக